Kanavae Kalaigirathe |
|---|
ஆஅஆஅஆஅ
கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதேஏய்
காதல் இது தானா
உலகெல்லாம் வழிகள் பொதுதானா
மனசுக்குள் அணில்பிள்ளை போல
அழுவதும் அதுதானாஆ
வார்த்தைகளை மௌனம்
கொன்று தின்றதில் தனிமையிலே
தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனேஏன்
காற்று வந்து காதல் சொன்னதாஆஅ
இது தானா காதல் இதுதானா
வேர் அரும்பே வீசும் புயல்தானா
இது தானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழிதானா
கனவே கலைகிறதே
காற்றென வழிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதேஏய்
காதல் இது தானா
உலகெல்லாம் வழிகள் பொதுதானா
மனசுக்குள் அணில்பிள்ளை போல
அழுவதும் அதுதானாஆ
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ
அழைப்பதை கானல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை
அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும்
முன்பே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்
சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா
இது தானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீ ஆனால்
மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில்பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிகிறதேஏய்
