Kandane Engum

Kandane Engum Song Lyrics In English


ஆஅஆஅஆ
ஹாஆஆஆஆ

ஆஅஆஅஆ
ஹாஆஆஆஆ

ஹாஆஆஅஆஆஆ

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்


தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்
தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அங்கே அன்று இங்கே இன்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

ஆஆஆஆஆ
வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ நினைத்தால்
சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும்
எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்