Kann Kavarum Bommaiyadi

Kann Kavarum Bommaiyadi Song Lyrics In English


கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி

கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி கண் கவரும் பொம்மையடி

அஹிம்சையாலே விடுதலை கண்ட அண்ணல் காந்தியை பாரடி நம் அண்ணல் காந்தியை பாரடி அரசை வெறுத்து அன்பை வளர்த்த அமரர் புத்தர் தானடி அழிவு செய்யும் பாவியர்க்கும் அருள் காட்டும் யேசுவடி

கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி கண் கவரும் பொம்மையடி

பலரும் புகழும் அபிநயம் காட்டும் பரதநாட்டியம் பாரடி

பலரும் புகழும் அபிநயம் காட்டும் பரதநாட்டியம் பாரடி மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும் மணிப்புரி நடனம் தானடி கலை மொழியால் கதக்களியால் கதை சொல்லும் காட்சியடி

மலர்க்கொடி போலே நெளிந்து ஆடும் மணிப்புரி நடனம் தானடி கலை மொழியால் கதக்களியால் கதை சொல்லும் காட்சியடி


கண் கவரும் பொம்மையடி

தன் நிழல் சாயாத தஞ்சை கோபுரம் தாஜ்மகால் இது தானடி மண்ணும் கல்லும் மனிதர்களாலே மகிமை அடைந்ததை பாரடி மகிமை அடைந்ததை பாரடி

மனிதர்கள் மட்டும் மாறாத வறுமையில் வாடுவதேனடி

தன்னலமும் போட்டிகளும் சதிராடும் விந்தையடி

கண் கவரும் பொம்மையடி கன்னியரின் திறமையடி கலை எழிலும் கைத்தொழிலும் கலந்தாடும் புதுமையடி கண் கவரும் பொம்மையடி