Kannae Azhagaaga Nee Oonjal Aadu

Kannae Azhagaaga Nee Oonjal Aadu Song Lyrics In English


ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
போற்றிடும் பூங்கோதை
போலிந்த புவிமேல் நீ
பொன்னே யென் அன்பேகொண்ட
பொன்காய்க்கும் தருவே நான்
புகழுமாம் பொன் காய்க்கும் தருவே
போதே செம்பொன்னூஞ்சல் மீதாடும் பூவாய்

கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு

தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்

மனம்போலவே உந்தன் மனம் போலவே

இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக

பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா


மாப்பிள்ளை நான் நீ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா

சமயோசிதம் அது சமயோசிதம்

இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக