Kannai Kasakkum

Kannai Kasakkum Song Lyrics In English


கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்

நிறத்துக்கு ஒவ்வொரு
மதிப்பு அந்த நிறங்களில்
சிவப்பே சிறப்பு வறுமையின்
நிறமா சிவப்பு அதை மாற்றும்
நிறமே சிவப்பு

பிள்ளை தமிழ்
இனமே எழு எழு எழு
அறிவை ஆண்டவனாய்
தொழு தொழு தொழு

நீளும் ஆகாயம்
தொடு தொடு தொடு
நிலவை பூமியிலே
நடு நடு நடு

கண்ணை திறக்கும்
கல்வி இங்கே குருடாய்
போனதே காசு எறிந்தால்
கதவு திறக்கும் வணிகம்
ஆனதே

கலைமகள் தனது
மகளை சேர்க்க பள்ளி
ஏறினாள் வீணை விற்று
கட்டணம் கட்டி வீடு
திரும்பினாள் சரியா சரியா

ஒரு கல்வி மனித
உரிமை என்று காணலையா
முறையா ஒரு ஏழை வீட்டில்
கல்வி என்ன பொய்யா

குடிக்கும் தாய்ப்பாலுக்கு
விலை ஒன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம்
கேட்டு விற்காதே

கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்


என் தமிழ் நாட்டின்
மக்கள் தொகையோ ஆறு
கோடிகள் இந்திய நாட்டின்
மக்கள் தொகையோ நூறு
கோடிகள்

மனிதனை மனிதன்
சாப்பிடும் முன்னே தடுத்து
நிறுத்துங்கள்

உங்கள் அரிசியில்
உங்கள் போ் உண்டு
உழைத்தே உண்ணுங்கள்
குழந்தாய் குழந்தாய்

இது போட்டி உலகம்
போட்டி போட்டு முந்தி விடு
கொழுந்தே இது நாடு அல்ல
புலிகள் வாழும் காடு

உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு
கண்ணை மூடாதே

கண்ணை கசக்கும்
சூரியனோ ரெட் ரெட் ரெட்
ரெட் காணும் மண்ணில்
சரி பாதி ரெட் ரெட் ரெட்
ரெட்

உடம்பில் ஓடும்
செங்குருதி ரெட் ரெட் ரெட்
ரெட் உழைக்கும் மக்கள்
உள்ளங்கை ரெட் ரெட் ரெட்
ரெட்

நிறத்துக்கு ஒவ்வொரு
மதிப்பு அந்த நிறங்களில்
சிவப்பே சிறப்பு வறுமையின்
நிறமா சிவப்பு அதை மாற்றும்
நிறமே சிவப்பு

பிள்ளை தமிழ்
இனமே எழு எழு எழு
அறிவை ஆண்டவனாய்
தொழு தொழு தொழு

நீளும் ஆகாயம்
தொடு தொடு தொடு
நிலவை பூமியிலே
நடு நடு நடு

Tags