Karuve |
---|
யாரோ யாரோ
உன்னை விதைத்தது
யாரோ யாரோ யாரோ
உன்னை சிதைத்தது
யாரோ
யாரோ யாரோ
உன்னை எழுதியது
யாரோ யாரோ யாரோ
உன்னை அழித்தது
யாரோ
தீயே தீயே
உன்னை அணைத்தது
யாரோ பூவே பூவே
உன்னை நசுக்கிய தாரோ
தோன்றும்
உன்னை கொன்றதாரடி
கருவே
ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா
நீள் துயரும்
பிறவி துயரும் எனவே
உறவே கலைந்தாயடி
பாழ் உலகம்
சுழலும் நரகம் எனவே
அழகே கரைந்தாயடி
தாயின் தீயில்
தீய்ந்து தீய்ந்திடு கருவே
நீ உறங்கு உயிரே
உறங்கு இதுவே கடைசி
தாலாட்டென ஆஆ ஆஆ
தாய் விழியில்
வழியும் துளியில்
கரைவாய் கடைசி
நீராட்டென புள்ளி
உன்னில் கொள்ளி
வைக்கிறோம் கருவே
ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம்