Kathayai Kelada

Kathayai Kelada Song Lyrics In English


கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா

வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில்
அன்பில் தோய்ந்து கிடக்கையிலே
குள்ள நரி வந்து கலைத்ததடா

குள்ள நரி வந்து கலைத்ததடா
வெள்ளை மனமும் கருத்ததடா
வெள்ளை நிறப் பசு ஒன்று
துள்ளுங் கன்றோடு
அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில்
குள்ள நரி வந்து கலைத்ததடா

வெள்ளை மனமும் கருத்ததடா
பாசமெல்லாம் பறந்ததடா
பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ


கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா

கண்கள் திறந்து எழுந்ததடா
கன்றை நினைத்து அலைந்ததடா
மனது ஒடியும் வேளையிலே
அம்மா எனுங் குரல் கேட்டதடா
தாவி ஓடி அணைத்ததடா
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஅஆஅ

கதையைக் கேளடா கண்ணே
கதையைக் கேளடா
கண்ணும் மணியும் கலந்ததட
கதையும் முடிந்து போச்சுதடா
கண்ணே கேளடாமணியே கேளடா
கண்மணியே கேளடா