Kelu Pappa Aasaiyin Kathaiyai

Kelu Pappa Aasaiyin Kathaiyai Song Lyrics In English


கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை

கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை

அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும் ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும் எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எல்லோரையும் வெல்லுவதில்லை

கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை

நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும் ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும் ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆண்டவன் கூட ஆசையின் பின்னே


கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை

ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால் கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நிம்மதி இறைவன் சன்னதி தானே

கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை

கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை