Konjam Nilavu

Konjam Nilavu Song Lyrics In English


கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்

சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா
சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா

கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்

என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்
வான் மழை போல்
உயிரில் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும்
வகையில் வந்து பொழிவான்
தேன் இதழை இவள்
தந்து மாயாது
இனி பார்கடலில்
அலை என்றும் ஓயாது

வந்து நான் மண்ணிலே
ஏன் பிறந்தேன்
என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால்
ஒரு தோல்வி நேராது

மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மண்ணல்ல
வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத் துளி உப்பல்ல
செந்தாழம் பூவுக்கு
முள்ளொன்றும் குறையல்ல
ஆஆஆஅஆஅ
உள்ளொன்று வைத்தாலும்
உன்மீது பிழையல்ல

கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்

கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்


சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா
சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா

ஆஹாஆஅஆஅஆ(4)

பெண்ணே உன் கண்ணாளன்
பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம்
விளையாட தருவானே
ஓஅஹ்ஆஆஅஆஆ

கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்

கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்

சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா
சந்திரலேகா ஆஆ
சந்திரலேகா

ஆஹாஆஅஆஆஅஅஹ்