Koodu Engae |
|---|
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன
நீங்கள் சொல்லுங்களேன்
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
கோபமாய் பேசினேன்
வார்த்தையை வீசினேன்
உன்னை வாயாடிப் பெண்ணாக இன்று
காலங்கள் தந்திடும்
காயங்கள் தாங்கினேன்
உந்தன் சொல் கூட அது போல ஒன்று
பூந்தோகையே
சொன்ன என் வார்த்தையே
உன்னை அறியாமல்
நான் சொன்ன மொழிதானம்மா
என் சோகமே என்றும்
என்னோடுதான்
எந்தன் சுமை தாங்கி
எந்நாளும் நான்தானய்யா
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
ஈன்ற தாய் உண்டு
நீ உண்டு ஓர் வீட்டிலே
அந்தத் தாய் கூட எனக்கில்லை சொல்ல
அந்தத் தாய் போல
நான் உண்டு உன் வாழ்விலே
இங்கு யாரும் அனாதைகள் அல்ல
ஓர் ஓடத்தில் சேர்ந்து
நாம் போகிறோம்
சேரும் கரை ஒன்று
ஓர் நாளில் நாம் காணலாம்
கீழ் வானிலே தோன்றும்
விடி வெள்ளி போல்
வாழ்வில் ஒளி வீசும்
எதிர் காலம் உண்டாகலாம்
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
கேள்வியே பதில் என்ன பதில்களே வழி என்ன
நீங்கள் சொல்லுங்களேன்
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுதிங்கே