Koyilkalum Churchugalum

Koyilkalum Churchugalum Song Lyrics In English

கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்

மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே

ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன அவை யாவுமே அன்பின் அடையாளமே

ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன நாம் சேரும்போது பேதங்கள் ஏது கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம் காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே

கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்

இதயத்திலே இடம் ஏராளம் உண்டு எல்லோருமே இதில் குடியேறலாம் மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது மனிதர்களாய் நாம் அணி சேரலாம்

மாதாவின் கோயில் மணியோசையோடு அல்லாவை தேடு பகவானை பாடு ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு