Kuthala Kathaga |
|---|
குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா
கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா
அவ வந்தாளே
வரம் தந்தாளே முழு
சந்தோஷம் அட
இன்னாளே
விழி வாளாலே
வெட்டி சாய்ச்சாளே
இடை நூலாலே
என்னை நூத்தாலே
அட மத்தியான
கூவிடும் கொண்ட சேவல்
அதைப் போலத்தான் கூவுங்கடா
ஒரு முட்டாளா
மாறட்டா இந்தக் காதல்
நம்ம விட்டோடிப்
போகுமடா
வேதம் பாக்காம
யாரும் கேக்காம காதல்
சொன்னாளே
வாசப் பூவாட்டம்
வானவில்லாட்டம்
வாசல் வந்தாலே டா
இமை சாத்தாம
அவ பாத்தாலே தலைகீழாக
நான் ஆனேனே
அவ ஆறாக
அட போனாலே நான்
பூவாக அதில் போனேனே
அவ நெஞ்சோரம்
நான் வைக்கும் இங்க்கு
பேனா அவ இல்லாம
வாழ்வேனடா
என் கண்ணோரம்
தீ வச்சி நித்தம் போனா
நான் சொல்லாம சாவேனடா
நானும் தொட்டாலே
வானம் கொட்டாதே துாரல்
கொண்டாந்து தா தா தா
காதல் கொண்டாட
காலம் போதாதே லீவு
போடுங்கடா
குத்தாலக் காத்தாக
வந்தாளே குத்தாட்டம்
போடத்தான் வச்சாளே
ரெண்டாளா நான் இங்கப்
போனேனே சண்டாளன்
ஏதேதோ ஆனேனே அவ
பன்னீரு பேச்சால வெந்நீரு
மூச்சால காணாமப் போனேனடா
கிளி மூக்கால
கொத்திப் போனா நானு
போனேனே சுக்குநூறா
இப்பத் தண்டோரா
போடுங்கடா எல்லாம்
குண்டக்க மண்டக்காடா
