Lala Nandalala

Lala Nandalala Song Lyrics In English

சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ

லாலா நந்த லாலா வா வாஆவா வாஆ லாலா நந்த லாலா வா வாஆவா வாஆ

மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும் ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும்

துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க

சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ

லாலா நந்த லாலா வா வாஆவா வாஆ

தீப்பிடித்த தென்றல் ஆனேனே வேர்வரைக்கும் வெந்து போனேனே

தீப்பிடித்த தென்றல் ஆனேனே தக திக்தை தகதோம் வேர்வரைக்கும் வெந்து போனேனே தக திக்தை தகதோம்

என் தேகம் வியர்வை குளம் அதில் என் கண்கள் ஒளிக்கும் இடமடி வாழைப்போல் வழுக்கும் உடலடி வா என்னும் வயசடி

நெஞ்சை வேக வைத்தானே நித்தம் சாக வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே

சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ

லாலா நந்த லாலா வா வாஆவா வாஆ

ஜாமத்துக்குள் காமன் வந்தானே ஜாதகத்தில் மச்சன் என்றானே

ஜாமத்துக்குள் காமன் வந்தானே தக திக்தை தகதோம் ஜாதகத்தில் மச்சன் என்றானே தக திக்தை தகதோம்

நீ பார்த்தால் புடவை சரிந்தது என் பூவில் காம்பும் மலர்ந்தது என் கண்ணின் மணியும் சிவந்தது என் பெண்மை விடிந்தது

என்னை அற்பமாக்கினான் கண்ணை கர்ப்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான்