Maalai Podura

Maalai Podura Song Lyrics In English


மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல

மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல

தள்ளாத வயசிலே தந்தை இங்கு படுத்திட்டான்
இல்லாத சீதனத்த தன்னை வித்து கொடுத்திட்டான்
போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்
போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம்
கல்யாணம் சொர்க்கத்தில் உண்ம தானா ஹ

மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல


பொண்ணோட நெத்தியிலே குங்குமமா மின்னுவது
அப்பாவின் மேனியிலே சிந்தி வந்த ரத்தம் அது
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு
சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு
கண்ணீரும் பன்னீரும் ஒண்ணு தானா

மால போடுற கல்யாணமா
ஏலம் போடுற வியாபாரமா
பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன்
யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல
வெட்கமில்ல மானமில்ல