Maayam Seithaai Poove

Maayam Seithaai Poove Song Lyrics In English


இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன்

பாடல் ஆசிரியர் : மனோஜ் பிரபாகர் எம்

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

மாயம் செய்தாய் பூவே நான் இனி நானே இல்லை மாலை மேகம் போலே சாய்ந்தேன் நீயே இல்லை

காதல் சொல்லும் நேரம் காற்றும் போதவில்லை சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா

தேடல் தந்தாய் பெண்ணே தூக்கம் கண்ணில் இல்லை நேரில் நீயும் நின்றால் நெஞ்சில் சத்தம் இல்லை

ஆசை பேசும் வேளை வார்த்தை தேவையில்லை வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா


தாளம் போடும் கால்கள் தானாய் என்னை தட்டி செல்லும் தோளில் ஆடும் கூந்தல் தீ போல பற்றி கொள்ளும்

பார்க்கும் பார்வை பொய்யா பேசும் வார்த்தை பொய்யா காதல் கண்டேன் உன்னில் நான்

காதல் கண்டேன் அன்பே ஓஹோ காதல் கண்டேன் அன்பே ஓஹோ

வார்த்தை மூடி கொண்டு காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா

மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே