Manappennin Sathiyam

Manappennin Sathiyam Song Lyrics In English


காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

வாழை மரம்
போல என்னை வாரி
வழங்குவேன் ஏழை
கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்

கணவன் என்ற
சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது
கண்ணில் பார்த்திட
செய்வேன்

மழை நாளில்
உன் மார்பில் கம்பளி
ஆவேன் மாலை காற்றை
தலை கோதி நித்திரை
தருவேன்

காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே


உனது உயிரை
எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

கால மாற்றம்
நேரும் போது கவனம்
கொள்வேன் கட்டில்
அறையில் சமையல்
அறையில் புதுமை
செய்வேன்

அழகு பெண்கள்
பழகினாலும் ஐயம்
கொள்ளேன் உன் ஆண்மை
நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

உன் கனவுகள்
நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்

காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது