Mangalam Pongum |
|---|
மங்கலம் பொங்கும்
மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு
கதிர் போலே வாழிய நீடு
மங்கலம் பொங்கும்
மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு
கதிர் போலே வாழிய நீடு
சங்கமம் கண்ட
சரித்திர நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு
வேறெது ஈடு
சங்கமம் கண்ட
சரித்திர நாடு
எங்கள் சந்தன தமிழுக்கு
வேறெது ஈடு
சந்தன தமிழுக்கு
வேறெது ஈடு
மங்கலம் பொங்கும்
மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு
கதிர் போலே வாழிய நீடு
இன்னிசை தென்றல் காவியம் பாட
புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க
உயர் பெண்மையின் கற்பெனும்
தீக்கனல் பறக்க
உயர் பெண்மையின் கற்பெனும்
தீக்கனல் பறக்க
மங்கலம் பொங்கும்
மணித் தமிழ்நாடு
புகழ் மனத்தோடு
கதிர் போலே வாழிய நீடு
அன்பு மலர்ந்திட
பண்பு வளர்ந்திட
அறமே வாழ்க
தென்னை செழித்திட
கன்னல் தழைத்திட
திருவே வாழ்க
தண்டை குலுங்கிட
தாளம் முழங்கிட
கலையே வாழ்க
நெஞ்சு மகிழ்ந்திட
கொஞ்சும் பசுங்கிளி
தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க
பரத கலையே வாழ்க
