Marainju Ninnu Paakkira Ponnu

Marainju Ninnu Paakkira Ponnu Song Lyrics In English


ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல



வெளக்கேத்த வெகுநேரம் காத்திருந்தேன் நீ வெளையாட்டை வினையாக்கி வரவேயில்லை முகத்தோடு திரை போடும் பூவையடி உன் மணத்தோடு திரை போட்ட கதை என்னடி

முறை இங்கே இருக்கையிலே திரையென்ன தேவையடி நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா நீதானே நானம்மா நான்தானே நீயம்மா

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல


ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ

கடலோடு விளையாடும் மீன்களம்மா இந்த ஒரு மீனை நான்தானே அறிவேனம்மா பலநாளும் வலைவீசிப் பார்த்து விட்டேன் எதிர்பாராமல் சரியாக விழுந்தாயம்மா

இனி என்ன கேள்வியில்லை இரு பேர்க்கும் தோல்வி இல்லை நீ வந்தாலும் நின்னாலும் சொல்லாமல் போனாலும் நீதானே நானம்மா நான்தானே நீயம்மா நீதானே நானம்மா நான்தானே நீயம்மா

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல என் ராசி சொல்லுதடி நீ என் வீட்டு மகராசியே ஆஅஹஹாஅஹா

மறைஞ்சு நின்னு பாக்கிற பொண்ணு கிட்டவாடி மெல்ல மனுஷந்தான்டி நானும் கூட மத்தவன் போல் அல்ல

ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலே ஏலேலோ