Mayangum Vayathu |
|---|
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
ஆடையில் மூடிய
ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க
ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க
வாவென ஜாடையில் எனை வரவழைக்க
வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க
மூவகை தேன் கனி
ஒன்று குறைந்திருக்க
மூவகை தேன் கனி
ஒன்று குறைந்திருக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க
முதலில் தயக்கம்
முடிவில் மயக்கம்
இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும்
மயங்கும் வயது
மடிமேல் விழுந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
இதழ்கள் மலர்ந்து
வழங்கும் விருந்து
விருந்து விருந்து
மாமர தோப்பினில்
வண்டு பறந்து வரும்
மாம்பழ சாறினில்
வந்து மயங்கி விழும்
மாமர தோப்பினில்
வண்டு பறந்து வரும்
மாம்பழ சாறினில்
வந்து மயங்கி விழும்
மீறிய போதையில்
தன்னை மறந்திருக்கும்
போனது போகவும்
மிச்சம் சுவை இருக்கும்
ஆடிய நாடகம்
நெஞ்சில் நினைவிருக்கும்
ஆடிய நாடகம்
நெஞ்சில் நினைவிருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும்
நினைத்தால் தொடங்கும்
அணைத்தால் அடங்கும்
தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும்
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இனிமேல் வரவு இளமை செலவு
இதுதான் உறவு நெடுநாள் கனவு
இருவர் : இதுதான் உறவு உறவு உறவு