Mazhai Mega Vanna

Mazhai Mega Vanna Song Lyrics In English


ஆஆஆஅஆஅ
ஆஅஆஅஹாஆஅ
மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட
அன்பே உன் அருள் எங்கே

நாவெழும் வார்த்தையோ
ரகுபதி ராமனன்றோ
பூஜை மனம்தான் கோவில்
போற்றும் ஜெயராமனன்றோ

ராம நாமம் ஜபிதென்றும்
உள்ளமிது தேம்பிடாதோ
ராம நாமம் ஜபிதெங்கும்
உள்ளமிது ராமா

பல ராட்ச நங்கை
இனம் மேவிய லங்கை
நெஞ்சில் தினமூராதோ
உனை அழைக்காதோ
தூண்டில் புழுவாய்
மங்கை துடித்தாள்

மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட
அன்பே உன் அருள் எங்கே

நான் முகன் பேரன்
இலங்கை சூரன்
வந்தான் இங்கே
கண்கள் ரெண்டில் கனலை பார்
காட்டு தீயாக
உன் ஜபம்தானோ
ராம நாமம் உன் கதிதானோ
ராம நாமம் தான்
ரட்ச்சிக்கும் எண்ணம்
என்னடி கண்ணே சீதா
சீத்தா இப்புவியில்
யாவும் என் ஆட்சி
என்னுயிர் பெண்ணே

என்னுடைய ஒரு சொல்லே
உன்னை தீர்க்கும்
நீ என்னிடுக இலங்கேசா
தசரதன் மகன்
வில்லுக்கிழுக்காகும்
அவன் அயோத்தி மகராசா

மலரினும் மென்மை
மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை
வெண்ணிலவின் தன்மை
எவர் வந்து கலங்கம்
இழைத்தாலும்
பெரும் எரிமலை பெண்மையடா

பத்து தலைகளை தீர்க்க
தின்மார்புகள் ஆக்க
ஸ்ரீராஜா ராம் இங்கு வந்திடுவான்
அந்த இளையோன் லக்ஷ்மன் அண்ணன் பின்னே

மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட
அன்பே உன் அருள் எங்கே ஏ


ராமன் மேல் ஆசை எதற்கு
ராமன் பேர் அவதாரமோ
உன் உயிர் காதல் அவன்தானோ
ஊர் மெச்சும் வீரனோ
லங்கை அழிக்க ஆகுமா
அடி நான் அலை பொங்கும் கடல்
பால் மனம் போல் கொஞ்சு மானே
ராமனா எனை மாய்ப்பது

ராமன் எனது
மனதின் மன்னன்
ராமனே இரு கண் மணி
ராமன் பேரை எழுதும் பெண்மான்
ராமன் என் ஜீவன் என்பேன்
ராமன் தழுவ மஞ்சள்மேனி
ராமனே எந்தன் சுவாசமே
ராமனல்லால் சேமம் ஏது
ராமன்தான் இங்கு யாவுமே

ஓ ஓஒ
நன்மை என்னும் நல்ல மனதில்
நின்றான் பார் ராமனே
தீமை அற்ற நெஞ்செல்லாமே
பார்க்கலாமே ராமனை

ராமன் பண்பை சொல்கிறேன்
எல்லோருக்கும் பெரிய நண்பனே
தீய செயல்தான் பாவ ராவணன்
ராமன் என்றால் பண்புதான்
ராமன் என்றால் பண்புதான்
ராமன் பேரே பண்புதான்
ராமன் சீரே பண்புதான்
ராமன் பேரே பண்புதான்
ராமன் சொல்தான் கனி மொழி
ராமன்தானே இரு கண்விழி

மாற்று ராவணா
குணம் அனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவணா
குணம் அனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்

ஓஓஒ ஆஆஆஆஆஆஅ
ஓஓஒ ஆஆஆஆஆஆஅ
ஓஓஒ ஓ ஓஒஓஓ

  மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட
அன்பே உன் அருள் எங்கே ஏ

ராஜாராமனும் வந்தார்
சீதாராமனும் வந்தார்
அந்த ராமச்சந்திரன்  வந்தார்
ஸ்ரீராமசந்திரன் வந்தார்
ராமசந்திரன் வந்தார் ரகுராமனும் வந்தார்
ஸ்ரீராமசந்திரனும் வந்தார்
ஹோஒ ஓஓஓஓஒ