My Dear Meena Un Idea Enna |
---|
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ் சி கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா கண்ணே மை டியர் மீனா ஐடியா என்னா வதைப்பது தானா என்னை வதைப்பது தானா
மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு
காதலைக் கண்ணாலே காட்டிய மண்மேலே வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சொல்லாலே அம்மாடி கொல்லாதே நல்லால்லே மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும் தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும் மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு
வேலையே போனா போகட்டும் தள்ளு ஜாலியாப் வாழலாம் சரியென்று சொல்லு வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் ஒன்னே வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா
வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும் மனம் மாறிப் பின்னாலே திசை தப்பி ஓடும் ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு அறியாத பெண்ணல்ல உஷ்மூச்சு மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு