Naan Paadam Solli

Naan Paadam Solli Song Lyrics In English

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன்

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் ஹா ஹா ஹா ஹா உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன் ஹா ஹா ஹா ஹா

எண்ணியதை முடிப்பேன் கண்ணி வச்சு புடிப்பேன் பொம்பளையின்னு இளிச்சா பல்ல ரெண்டும் ஒடைப்பேன் வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன் வாடா ராஜா ஒட்ட வால அறுப்பேன்

அழகில் நானொரு லில்லி விரும்பும் வாசனை மல்லி உண்மையில் என் பேர் அல்லி கோடியில் ஒருத்திதான் வில்லி

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் ஹா ஹா ஹா ஹா உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன் ஹா ஹா ஹா ஹா

கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது கோட்டைக்குள் மான் கூட்டம் வாழுகின்றது வேட்டைக்கு நாள் பார்த்து வேங்கை வந்தது

மான்கள் திரள வேங்கை மிரள மன்னிப்பு கேட்கின்ற வேளையிது

கட்டுப்பட்டால் பிழைக்கும் குட்டுப்பட்டால் விளங்கும் கட்டுப்பட்டால் பிழைக்கும் குட்டுப்பட்டால் விளங்கும் புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்

நான் பாடம் சொல்லிக் கொடுப்பேன் ஹா ஹா ஹா ஹா உன்னை பந்தாட்டம் ஒதைப்பேன் ஹா ஹா ஹா ஹா

அறியாமல் வழி மாறி வந்தவரடி சரியான மரியாதை தந்துவிடடி அறியாமல் வழி மாறி வந்தவரடி சரியான மரியாதை தந்துவிடடி

இளமை முறுக்கு இவருக்கிருக்கு எத்தனை தந்தாலும் தாங்குவாரடி இளமை முறுக்கு இவருக்கிருக்கு எத்தனை தந்தாலும் தாங்குவாரடி

இன்னும் கொஞ்சம் கொடுத்து மன்னன் தன்னை திருத்து இன்னும் கொஞ்சம் கொடுத்து மன்னன் தன்னை திருத்து புரியும் வண்ணமாய் எடுத்து எடுத்து தெரியும் வண்ணமாய் படித்து படித்து சொல்