Naan Paavadai Thavani

Naan Paavadai Thavani Song Lyrics In English


பாடகி : வாணி ஜெய்ராம்

பாடலாசிரியர் : வாலி

நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு ஆஹான் ஆஹான் ஓஹோ ஓஹோ ஹீஹி ஹீஹி ம்ம்ம்ம்

நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு

பங்குனி போச்சு சித்திரையாச்சு பங்குனி போச்சு சித்திரையாச்சு கல்யாண ஆசை வந்து நாளாச்சு கல்யாண ஆசை வந்து நாளாச்சு

நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு

பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா ஹா பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா

வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு


தெற்கத்தி சீமையில்லெல்லாம் பேரெடுத்த ஆட்டக்காரி யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க

நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு

அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே ஹான் அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே

என்னிடம் வாலை ஆட்டாதே பல்லை இளிச்சி காட்டாதே

கஸ்தூரி மானைப் போலே மானமுள்ள சின்னப் பொண்ணு கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு

நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு