Naan Thai Endru |
|---|
இசை அமைப்பாளர் : சிவா
அஹாஆஆஅஹாஆஆ
நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே
என் கண்மணி என்னை தீண்டினால்
என் கண்ணீர் இனிக்கிறதே
நான் பாட மறந்த
ஒரு தாலாட்டு இன்று
பிள்ளை வடிவில் வந்ததே
கொஞ்சம் நின்று போயிருந்த
என் பூமி இன்று
மீண்டும் சுழலுகின்றதே
உனை மகனே என்றதும்
உயிரே மலர்கிறதே
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே
பிள்ளை தூங்கிடும்
அழகை பார்க்கவே
இரவில் தூங்கவே மாட்டேன்
சின்ன பூவிதழ்
கனவில் பேசினால்
பதிவு செய்யவே பார்ப்பேன்
என் கருவோடு உன்னை
சுமக்கவில்லை
என் உயிரோடு உன்னை
சுமந்திருப்பேன்
என் மகனே உந்தன் மடிமேல்
உயிர் துறப்பேன்
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
நான் தாய் என்றாகும்
முன்னமே
என் தாய்பால் சுரக்கிறதே
நான் பாட மறந்த
ஒரு தாலாட்டு இன்று
பிள்ளை வடிவில் வந்ததே
கொஞ்சம் நின்று போயிருந்த
என் பூமி இன்று
மீண்டும் சுழலுகின்றதே
உனை மகனே என்றதும்
உயிரே மலர்கிறதே
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
ஆராரோஓஆராரோ
ஆரீராரோ
