Naan Unakku Nalla Paattu

Naan Unakku Nalla Paattu Song Lyrics In English


நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் அதக் கண்டிப்பா நீ கத்துக்கணும்

நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன்

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே

நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம் நான் உன்னவிட படிச்சவ நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்

உலக உருண்டைய ஒடைப்பேன் கெடச்சத சமமா கொடுப்பேன் எப்படி நீ சும்மா கொடுக்கும் பணம்தான் சோம்பல வளர்க்கும் உரம்தான்

ஒழைக்கணும் கொடுக்கணும் சொன்னாங்களே ஆஹாஹ் கொடுத்துட்டு தெருவுல நின்னாங்களே சம்சாரமே வேணான்டி ஏன் சன்னியாசமே போறேன்டி சிவசிவ சாமியாரா போனாலும் சோறு தின்ன காசு வேணும்


நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம் ஏனாம் நான் உன்னவிட படிச்சவ நீ எனக்கு ஒண்ணும் பாட்டுச் சொல்லி தரவேணாம்

கொடுக்குற கைதான் சிவக்கும் அதுதான் உலகத்த ஜெயிக்கும் இந்தான்னு தந்தாலே இனிக்கும் இல்லேன்னு சொன்னாலே கசக்கும்

பலன பாத்துட்டா தருமம் இல்ல கடன வாங்கிட்டா தூக்கம் இல்ல ஆம்பளைங்களே பொம்பளைங்களே அப்பாவி நான் இங்கே மாட்டிக்கிட்டேனே ஐய்யயோ அப்பாவா ஆகப்போறே உன்ன நானும் விடமாட்டேன்

நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் அத தெனம் தெனம் படிக்கணும் நான் உனக்கு நல்ல பாட்டு ஒன்னு சொல்லித் தருவேன் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் படிச்சவனோ பாட்டக் கெடுத்தான் இன்னுமொரு பாட்டுப் பாடி நம்ம நாட்டக் கெடுக்காதே

எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம் கண்டபடி திட்டிடுவேன் எவளும் எனக்கொரு பாட்டு சொல்லி தரவேணாம் வேணவே வேணாம்