Naan Unnai Thodalaam |
---|
நான் உன்னைத் தொடலாம் நீ என்னைத் தொடலாம் அந்தத் தென்றல் வந்து தொடலாமா
ஆஹா ஓஹோ ஆஆ
நான் உன்னைத் தொடலாம் நீ என்னைத் தொடலாம் அந்தத் தென்றல் வந்து தொடலாமா
சிற்றிடை சேர்த்து பிடிக்கட்டுமா செவ்விள நீரைக் குடிக்கட்டுமா சித்திரை நிலவில் நித்திரை மறந்தே ஒத்திகை பார்த்தேன் நடிக்கட்டுமா
நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம் இந்த அவசரம் வரலாமா ஹா ஓஹோ ஆஆ
நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம் இந்த அவசரம் வரலாமா
முத்தம் இடாத மலரல்லவோ மேகம் தொடாத நிலவல்லவோ முத்தம் இடாத மலரல்லவோ மேகம் தொடாத நிலவல்லவோ
கற்றது கொஞ்சம் மற்றதை நெஞ்சம் காலத்தில் அறியும் உறவல்லவோ
இருவர் : பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும் அந்தக் காவிய சுகம் புரியும் பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும் அந்தக் காவிய சுகம் புரியும்
ஆஹ்ஹா ஆஹாஹ் ஓஹோ ஆஆ ஹா