Naanthanda Madhurakaran

Naanthanda Madhurakaran Song Lyrics In English


நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் கில்லாடிக்கு கில்லாடி நான் என்னோட நீ வந்து மோதாதே

வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹேய் வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் ஹேய்ய்ய்

நல்ல பேர்க்கு நாயாவேன் இல்லையென்றால் பேயாவேன் ஆலகாலம் தந்தாலும் நீலகண்டன் போலாவேன்

வெட்ட வெட்ட வாழைப் போல வளர்ந்து நிக்கும் ஜாதி நானடா ஹேய் ஹேய் ஹேய் சுட்டபோதும் தங்கம் மின்னும் ஊரறிந்த சேதிதானடா

நண்பன் யாரு பகைவன் யாரு கண்டு கொள்ளும் நேரமல்லவா ஹஹா உள்ளமுள்ள யாவருக்கும் தெய்வம் என்றும் காவலல்லவா

கமான் வேங்கை எப்போதும் பாயுறதில்லே ஹேய் பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன்


தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா தந்தன தந்தன தானானா தானானனா

போகப் போக தெரியாதா போடும் வேஷம் புரியாதா முள்ள முள்ளால் எடுப்பேன்டா முடிவில் நான்தான் ஜெயிப்பேன்டா

காலம் நேரம் யாவும் இன்று சாதகம் என் ஜாதகத்திலே ஹா ஹா காட்சி யாவும் மாறக்கூடும் நீ நடத்தும் நாடகத்திலே

அச்சமில்லை அச்சமில்லை ஆண்மை உண்டு என்னிடத்திலே ஆன மட்டும் மோதி பாரு காட்டுகின்றேன் உன்னிடத்திலே ஹஹா ஹஹா

அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன் கில்லாடிக்கு கில்லாடி நான் என்னோட நீ வந்து மோதாதே

வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே ஹே வேங்கை எப்போதும் பாயுறதில்லே பாய்ஞ்சா மான் கூட்டம் தப்புனதில்லே

அட நான்தான்டா மதுரக்காரன் ராணி மங்கம்மாவோட பேரன்