Nalla Kaariyam Onnu

Nalla Kaariyam Onnu Song Lyrics In English


இசை அமைப்பாளர் :  டி ஆர் பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு வீதியில் நின்னு ஆடுது பொண்ணு கையை பையில விட்டு போடுங்க துட்டு ஐயா புண்ணியம் கோடி ஐயா புண்ணியம் கோடி

நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு வீதியில் நின்னு ஆடுது பொண்ணு கையை பையில விட்டு போடுங்க துட்டு ஐயா புண்ணியம் கோடி ஐயா புண்ணியம் கோடி

{காலும் கையும் நல்லா இருந்தா நாலும் நடக்கும் இங்கே} (2) அது கோணி குறுகி குன்றி கிடந்தா கட்டிக் காப்பார் எங்கே

மாடும் மனையும் உள்ளவரைக்கும் கூட இருக்கும் சொந்தம் நிலைமாறி போனா ஓடி போகும் மக்கள் கொண்ட பந்தம்


நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு வீதியில் நின்னு ஆடுது பொண்ணு கையை பையில விட்டு போடுங்க துட்டு ஐயா புண்ணியம் கோடி ஐயா புண்ணியம் கோடி

தீமை செய்யும் பேச்சை விட ஊமைப் பிறப்பு மேலே ஒரு கள்ளமில்லா பிள்ளை போலே உள்ளம் உள்ளதனாலே

{வாயில்லாத பூச்சிகளுக்கும் தாயாய் நிற்பது சாமி} (2) அட வானம் என்பதை கூரை என்றால் வீடாய் நிற்பது பூமி

நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு வீதியில் நின்னு ஆடுது பொண்ணு கையை பையில விட்டு போடுங்க துட்டு ஐயா புண்ணியம் கோடி ஐயா புண்ணியம் கோடி ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ (2)