Nanbaa Vaa Nanbaa |
|---|
இசை அமைப்பாளர் : டி இமான்
வருவது ஒருமுறை உலகிலே
இதை அறிகிற மனிதனும் கடவுளே
தவறுகள் திருந்திடும் வரையிலே
வரும் தடைகளும் தகர்ந்திடும் முடிவிலே
நமை நாமே உணர்ந்தாலே
கிடையாது வேதனை மனதிலே
நதி போல நடந்தாலே
ஒரு கோடி சூரியனும் தரையிலே
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
சிறகுகள் விரித்திடு பறக்கலாம்
வரும் சிரமங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
அலைகடல் என தினம் குதிக்கலாம்
கடல் கடந்தொரு பெயரையும் எடுக்கலாம்
மழை ஊற்று அனல் காற்று
எதுவான போதிலும் ரசிக்கலாம்
சில வாரம் பல பூமி
என நாமும் மாறவே நினைக்கலாம்
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
காலம் ஒன்று மாறும் என்று
காத்திருபதா நல்லது
காலம் தன்னை மாறச்செய்யும்
சாட்டை நெஞ்சிலே உள்ளது
தூசியாலே கலங்கும் விழியை
துடைப்பதா விசித்திரம்
காற்றும் கூட நமது பெயரை
உரைப்பதே சரித்திரம்
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
வா நண்பா வா வா வா
அன்பை விட சிறந்தது
இல்லை என முழங்கிடு
புன்னகை என்னும் உடையே முகவரி
உள்ளவரை விழித்திரு
உள் மனதில் பசித்திரு
ஒற்றுமையில் இவ்வுலகை அலங்கரி
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா வா நண்பா
நண்பா நண்பா
நண்பா வா வா வா
நண்பா வா நண்பா
நண்பா நண்பா
வா நண்பா வா வா வா