Nanendra Aganthaiyinal |
---|
நானென்ற அகந்தையினால் தலை நிமிர்ந்து
நான் செல்லும் வழி தடுத்தான்
வானுள்ளோர் நகைத்திடவும்
மண்ணுள்ளோர் பழித்திடவும் வசையே தாங்கி
வீணனாம் விந்தியனும் செருக்கழிந்து
உருக்குலைந்து நில மேல் வீழ
ஞானச் செந்தமிழ் அளித்த நாயகனே
எனக்கும் உன்னருள் நல்குவாயே