Nattupura Pattu Onnu

Nattupura Pattu Onnu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

தந்தா னா நன னானா னானா
ஏ தந்தானானானா னானா

தந்தானானா தானானானா னானா
தந்தனான னானா தனானானா

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு
நான் படிக்கிறேன் கேளு மச்சான்

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு
நான் படிக்கிறேன் கேளு மச்சான்

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்

எந்த வீட்டுக் கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்
எந்த வீட்டுக் கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும்
எட்டும் எட்டும்

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்

அடிச்சு தொவைக்கும்
சத்தத்துக்கு பாட்டு வருமே
இடிக்கும் ஒலக்க
சத்தத்துக்கும் பாட்டு வருமே

மரத்தில் குயிலின்
சத்தமோ பாட்டு ரகமே
பாட்டு ரகமே
கறக்கும் பசுவின்
சத்தமோ பாட்டு ரகமே
பாட்டு ரகமே

வயலோரப் பாட்டு
வரமான பாட்டு
வயசான போதும்
வளமான பாட்டு
ஒரமான பாட்டு
உலகாளும் பாட்டு
எது வந்த போதும்
எளைக்காத பாட்டு

நாத்து நடும் நேரத்துல
நாக்கு வழி வளந்ததிது
டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டக்கு

களை எடுக்கும் கூட்டத்துல
கதகதையா பொறந்ததிது
டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டா


தெரு திண்ணையிலே
தவழ்ந்து
இந்த மண்ணில் முளைச்சதிது

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்

பொறந்த கொழந்த
பசிச்சு பாலுக்கழுதா
பாலுக்கழுதா
ஆத்தா அணச்சு
பால பாட்டா தருவா
பாட்டா தருவா

ஒறக்கம் வரவே
தெனமும் தாலாட்டுடனே
கருத்து நெறஞ்ச பாட்ட
கலந்து தருவா

தாய் வீட்டுப் பாட்டு
தமிழ்நாட்டுப் பாட்டு
தடம் மாறிப் போக
தெரியாத பாட்டு
அகம்பாவம் தீர்க்கும்
அறிவான பாட்டு
அறியாமை நோய்க்கு
மருந்தான பாட்டு

பாவலரு வரதராசன்
பாடி வச்ச பாட்டு இது
டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டக்கு

பாமரரும் படிக்கும்படி
பக்குவமா அமஞ்சதிது
டாக்கு டக்கு டடக்கு டக்கு
டாக்கு டக்கு டடக்கு டா

என் சக்தி தெரிஞ்சிருச்சா
ஓம் புத்தி தெளிஞ்சிருச்சா

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்

எந்த வீட்டு கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும் எட்டும்
எந்த வீட்டு கதவையும் தட்டும்
எந்த நாட்டுக்குள்ளேயும்
எட்டும் எட்டும்

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நான்
படிக்கிறேன் கேளு மச்சான்
இது ஏட்டு சொரக்காயும் இல்ல
பாட்டன் நல்லா பாடி வெச்சான்