Neethi Ithu Engal Neethi

Neethi Ithu Engal Neethi Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் பிழைகள் புரியும் மனிதன் உலகில் எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள் கை விட்ட தர்மத்தை காக்கும்

எங்கள் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம்

நீதியின் மன்றங்கள் ஏழைக்கில்லை அதுவே அவனுக்கு தண்டனை தான் எவரோ சொல்லிய வார்த்தை இல்லை அண்ணா சொல்லிய சிந்தனை தான்

சாட்சிகள் இல்லை என்றால் காட்சிகள் மாறுதடா சட்டமும் அவர்களுக்கு சாதகம் ஆனதடா

நரியின் நடமாட்டம் இனியும் விட மாட்டோம் முடியும் அதன் ஆட்டம் விடியும் சமுதாயம் இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது வந்தது போராட்டம்

நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் பிழைகள் புரியும் மனிதன் உலகில் எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள் கை விட்ட தர்மத்தை காக்கும்


எங்கள் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம்

வலுத்தவன் கையில் பணம் இருக்கும் விலங்கினும் கீழாய் குணம் இருக்கும் இளைத்தவன் கேட்டால் கடன் கொடுப்பான் கொடுத்ததை அவனே கொள்ளை அடிப்பான்

மகளின் மணம் முடிக்க வாங்கிய கைப் பணம்தான் இழந்தால் நடப்பதெங்கே இள மகள் திருமணம்தான்

தர்மம் இது போலே தவறும் நிலை கண்டு வருவோம் துணையாக உதவும் பொருள் கொண்டு இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது வந்தது போராட்டம்

நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் பிழைகள் புரியும் மனிதன் உலகில் எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள் கை விட்ட தர்மத்தை காக்கும்

எங்கள் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம் நீதி இது எங்கள் நீதி வேதம் இது எங்கள் வேதம்