Nenje Nenje |
|---|
நெஞ்சே நெஞ்சே
மறந்துவிடு நினைவினை
கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
உறங்கிவிடு நிஜங்களை
துறந்துவிடு
கண்களை
விற்றுதான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள்
தூங்குமா கண்ணீரில்
காதல் வாழுமா
நெஞ்சே நெஞ்சே
மறந்துவிடு நினைவினை
கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
உறங்கிவிடு நிஜங்களை
துறந்துவிடு
ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
பெண்ணே பெண்ணே
உன் வளையல் எனக்கொரு
விளங்கல்லவோ காற்றுக்கு
சிறை என்னவோ
தன்மானத்தின்
தலையை விற்று காதலில்
வாழ் வாங்கவோ கண் மூடி
நான் வாழவோ
உன்னை எண்ணி
முள் விரித்து படுக்கவும்
பழகிக்கொண்டேன் என்னில்
யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை
மறைத்தேன் உயிர்வலி
பொறுத்தேனே சுயத்தை
எதுவோ சுட்டதடி வந்தேன்
நெஞ்சே நெஞ்சே
நெறுங்கிவிடு நிகழ்ந்ததை
மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே
நெகிழ்ந்துவிடு நிஜங்களில்
கலந்துவிடு
கட்டி வைத்த
காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை
ஏந்தினேன் காதல்
பிச்சை கேட்கிறேன்
ஹான்
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
அன்பே அன்பே
நீ பிரிந்தால் கண்களில்
மழை வருமே காற்று
எனை கை விடுமே
விதை அழித்து
செடி வருமே சிற்பிகள்
உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா
ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர்
வருமே உன்னை கொஞ்சம்
விட்டுக் கொடுத்தால் காதலில்
சுகம் வருமே அஸ்தமனம்
எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
