Nenjukkulla Aasa Vandha |
---|
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
மோகம் வந்து தீண்டும் போதிலே
பாராததைப் பார்க்கச் சொல்லுமே
காவல் தாண்டி போகச் சொல்லுமே
ஊரான் வீட்டு தோட்டத்திலே நீ நடந்தா
ஊருக்கெல்லாம் தெரிஞ்சு போகுமே
உன் மானம் சந்தையிலே வித்து போகுமே
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க
எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்
படிச்சவனோ பாட்டக் கெடுத்தான்
நானும் சொன்னேன் கேட்டா கேளுங்க
அனுபவத்தை சொல்லி வைச்சேன்
அத கேட்டா ஆசை பக்கம் பார்க்காதையா
அதனாலே அளவு மீறி போகாதீங்க
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
கொண்டவனோ தூங்கிவிட்டான்
வந்தவனோ பார்த்துக்கிட்டான்
எங்கே யாரை குத்தம் சொல்லுவேன்
அழகழகா பூவைக் கண்டால்
அத பார்க்க யாருக்குத்தான் ஆசை வராது
சுவை பார்க்க எவனுக்குத்தான் வேகம் வராது
நெஞ்சுக்குள்ளே ஆசை வந்தா
மானா மாவன்னா ராமசிவனே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
கண்ட கண்ட பக்கமெல்லாம்
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே
என் துரையே கண்ணுரெண்டும் போகவிடாதே