Nimmathi Enna Vilai |
|---|
ஓஒஓஒ ஓ
ஓஒஓஒ ஓ
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நான் சொன்னதை நம்பவில்லை
அடியே அது ஏன் என் பூங்குயிலே
அடி ஊரார் சொல்லிவிட்டால்
அதில் நியாயம் தவறாகும்
அதை நீயே சொல்லிவிட்டாய்
நான் அறியேன் ஒரு பாவம்
என்னுயிரே என்னுயிரே என்னுயிரே
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்
சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்
நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன்
சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்
மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன்
மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன்
நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா
அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா
தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன
தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன
தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன
தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன
தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே
உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே
நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி
நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி
தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ
நிம்மதி என்ன விலை
சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே
நான் சொன்னதை நம்பவில்லை
அடியே அது ஏன் என் பூங்குயிலே
அடி ஊரார் சொல்லிவிட்டால்
அதில் நியாயம் தவறாகும்
அதை நீயே சொல்லிவிட்டாய்
நான் அறியேன் ஒரு பாவம்
என்னுயிரே என்னுயிரே என்னுயிரே