Ninakka Vaithai Pesa

Ninakka Vaithai Pesa Song Lyrics In English


நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா

நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா

மறந்தவரை நினைக்க வைத்தாய் தேவ தேவா மறந்தவரை நினைக்க வைத்தாய் தேவ தேவா நெஞ்சில் நிறைந்தவரை பிரித்து வைத்தாய் தேவ தேவா

நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா

அவர் முகத்தை நினைக்க வைத்தாய் அவர் அடுத்தவரை மணக்க சொன்னார் அவர் முகத்தை நினைக்க வைத்தாய் அவர் அடுத்தவரை மணக்க சொன்னார் எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா எவர் மனதில் என்ன வைத்தாய் தேவதேவா இதில் என்னையுமேன் ஆட வைத்தாய் தேவதேவா


நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா

காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய் வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய் காட்சி வைத்தாய் காணுகின்ற கண்ணை எடுத்தாய் வீணை வைத்தாய் மீட்டுகின்ற விரலை எடுத்தாய் மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய் மேடை வைத்தாய் ஆடுகின்ற காலை எடுத்தாய் இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய் இனிமேலும் என்ன சோதனைக்கு என்னை படைத்தாய்

வாழ்வதற்கு படைத்திருந்தால் வாழ விடு தேவா மறைவதற்கென்றமைத்திருந்தால் அழைத்து விடு தேவா தங்க மலர் மணம் வீச செய்து விடு தேவா நீ சமைத்து வரும் சோதனையை முடித்து விடு தேவா

நினைக்க வைத்தாய் பேச வைத்தாய் தேவ தேவா ஒன்றை நினைக்கும்போது மறைத்துக் கொண்டாய் தேவ தேவா