Nithya Sumangali Neeye

Nithya Sumangali Neeye Song Lyrics In English


நித்ய சுமங்கலி நீயே என நிலையாய் நின்றிடும் தாயே நித்ய சுமங்கலி நீயே என நிலையாய் நின்றிடும் தாயே

சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம் நிலைத்திட அருள் புரிவாயே சத்தியம் அதுவெனில் பக்தை என் குங்குமம் நிலைத்திட அருள் புரிவாயே அம்மா துர்கே தாயே அம்பிகே அம்மா துர்கே தாயே அம்பிகே

எங்குமே நிறைந்த சக்தி எதனிலும் கலந்த சக்தி என்னுளம் இருக்கும் தேவியே தஞ்சம் என்று வந்தவர்க்கு அஞ்சேல் என்று அருள் புரிந்து சங்கடம் தவிர்க்கும் காளியே

எல்லோரும் உன் பிள்ளை அல்லவா இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா எல்லோரும் உன் பிள்ளை அல்லவா இதில் நல்லோர் தீயோர் பேதம் சொல்வதா யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி யோகி நீ புராதனி மோகினி மந்தாகினி


நான் தரித்த மாங்கல்யம் நீ பறிக்க வேண்டுமெனில் நானே உன் பாதத்தில் வைக்கின்றேன் நாதன் ஆவி போகும் முன் கபால மாலை தன்னில் கோர்க்க நானும் எந்தன் ஆவி இங்கு சேர்க்கின்றேன்

நான் தரித்த மாங்கல்யம் நீ பறிக்க வேண்டுமெனில் நானே உன் பாதத்தில் வைக்கின்றேன் நாதன் ஆவி போகும் முன் கபால மாலை தன்னில் கோர்க்க நானும் எந்தன் ஆவி இங்கு சேர்க்கின்றேன்

ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா ஓருயிரை இன்றே நீ காப்பாயா இல்லை ஈருயிரும் சேர்ந்திங்கு ஏற்பாயா மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ மாலினி மதாங்கினி சூலி நீ கபாலி நீ