Oh Mamma Dear Mamma

Oh Mamma Dear Mamma Song Lyrics In English


பாடகர்கள் : பி சுசீலா மற்றும் எஸ் பி சைலஜா

பாடலாசிரியர் : வாலி

விண் படைத்தான் மண் படைத்தான் பல கோடி உயிர் படைத்தான் படைத்தும் ஒரு பெருமையில்லை என நினைத்தான் மறு கணமே இறைவன் தாயை படைத்தான் இறைவன் தாயை படைத்தான்

ஓமம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

ஓமம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

அன்பில் நீ ஆகாய கங்கை பண்பில் நீ சீதாவின் தங்கை நீ என்ன சொன்னாலும் வேதம் அம்மா உன் தாலாட்டு கீதம் உறவு விரும்பும் வரங்கள் அளிக்கும் தாயின் கரங்கள் வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

ஓமம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை


ஒன்றல்ல ஏழேழு ஜென்மம் நீ எங்கள் தாயாக வேண்டும் இன்றல்ல எந்நாளும் நாங்கள் நீ கொஞ்சும் சேயாக வேண்டும் நமக்குள் இருக்கும் பாசம் மணக்கும் மல்லிகை வாசம் வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

ஓமம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை

கண்ணீரில் நீராடி நின்றாய் பன்னீரில் நீராட நாங்கள் துன்பத்தை போராடி வென்றாய் இன்பத்தை கொண்டாட நாங்கள் நன்றி உரைக்க நினைத்தோம் ஒரு வார்த்தையின்றி தவித்தோம் வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ

ஓமம்மா டியர் மம்மா உனதன்றி ஒரு தெய்வம் இல்லை நாம் மூவர் ஒரு தாயின் பிள்ளை பிரியாமல் உறவாடும் கிள்ளை வி லவ் யூ வி விஷ் யூ ஹேப்பி பர்த்டே டூ யூ ஹேப்பி பர்த்டே டூ யூ