Om Ganapathiye Ganapathiye

Om Ganapathiye Ganapathiye Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதியே கணபதியே வருவாய் அருள்வாய் குண நிதியே கணபதியே கணபதியே வருவாய் அருள்வாய் குண நிதியே

அம்பிகை ஈன்ற ஐங்கரனே வினைகளை தீர்க்கும் நாயகனே ஓம் கணபதியே கணபதியே வருவாய் அருள்வாய் குண நிதியே

வாரண முகனே சிவனார் மகனே வரங்களை கேட்டால் கொடுப்பவனே ஒரு மனதாக தொழுவார் தமக்கு வரும் இடர் யாவும் தடுப்பவனே ஓம் எனும் சொல்லின் பொருள் தான் நீயே காப்பதுன் பாரம் நான் உன் சேயே

ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதியே கணபதியே வருவாய் அருள்வாய் குண நிதியே

நினைத்தவை யாவும் நலமாய் முடிய துணைக் கரம் நீட்டும் தூயவனே உமையவள் பாலன் வடிவேல் வேலன் திருமணம் முடித்த மூத்தவனே சேவடி நாளும் துதித்திட்டேன் நானே வாழ்வில் என்றும் துணை வரத்தானே


நம்பியே பேர்க்கு நன்மைகள் சேர்க்கும் தும்பிக்கை நாதன் நீயல்லவோ

ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

ஆஆ ஆஆஆஆ தாயினும் மேலாய் தயவுகள் காட்டும் நாயகன் பாதம் நான் தொழவோ ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

ஆஆ ஆஆஆஆ இன்னருள் செய்யும் மன்னவனே ஓம் கணபதி ஓம் இன்னலை தீர்க்கும் புண்ணியனே ஓம் கணபதி ஓம் ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி ஓம்

ஆஆ ஆஆஆஆ கணபதியே கணபதியே வருவாய் அருள்வாய் குண நிதியே