Ondre Engal Devan

Ondre Engal Devan Song Lyrics In English


ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன் ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்

எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம் நான் நீ பேதமில்லை ஓர் தாய் பெற்ற பிள்ளை

உறவென்னும் பாச ஊஞ்சலில் பொழுதெல்லாம் ஆடுவோம் உயிருள்ள காலம் யாவுமே பிரிவின்றி கூடுவோம்

மனமென்னும் கோயில் வாசலில் மணி தீபம் ஏற்றுவோம் காலங்கள் மாறும் போதிலும் அணையாமல் போற்றுவோம் தாய் தான் தெய்வம் இங்கே தந்தை செல்வம் இங்கே

ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்

வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்று பாடுவோம் வசந்தங்கள் நாளும் வேண்டியே தெய்வத்தை நாடுவோம்


பூந்தென்றல் வீசும் சோலை போல் நாம் வாழும் வீடுதான் எந்நாளும் ஆடல் பாடல்கள் பொன்னான வாழ்வுதான் நான்தான் சொந்தம் கொண்டு காண்போம் சொர்க்கம் இங்கே

ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்

எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம் நான் நீ பேதமில்லை ஓர் தாய் பெற்ற பிள்ளை நான் நீ பேதமில்லை ஓர் தாய் பெற்ற பிள்ளை

இருவர் : லா லா லால லலலா லா லா லால லலலா