Oothukkuli Naathuthan

Oothukkuli Naathuthan Song Lyrics In English


ஊத்துக்குளி நாத்துதான் ஊசிக் குத்தும் காத்துதான் சமைஞ்சதிவ நேத்துதான் சாயந்திரம் கூத்துதான் ஹேய் தாலி தரும் முன்னே அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே

காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான் ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான் ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு

ஊத்துக்குளி நாத்துதான் ஓஹோ ஊசிக் குத்தும் காத்துதான் ஆஹான் சமைஞ்சதிவ நேத்துதான் ஓய் சாயந்திரம் கூத்துதான்



பொம்பள வாசம் அறியாது அட ஆம்பள வாழ்ந்து பயன் ஏது இப்படி என்னை சீண்டாதே நீ ரகசிய மகுடி ஊதாதே

சேலச் சாயம் வேட்டியில் ஏற சேர்ந்து தொவைப்போம் வா மாமா கெண்ட மீனு கொக்க பார்க்க கரைக்கு ஏறி வரலாமா பொண்ணப் பாத்து ஆண்மை என்ன வெட்கப்படலாமா

ஆசைகளை நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் பதுக்கு ஆம்பளைக்கும் அச்சம் மடம் நாணம் இருக்கு காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான் ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்

ஊத்துக்குளி நாத்துதான் ஊசிக் குத்தும் காத்துதான் சமைஞ்சதிவ நேத்துதான் சாயந்திரம் கூத்துதான்




பூவுல வாசம் தூங்காது இளம் பெண்ணுக்கு ஆச தாங்காது நான் ஒண்ணும் சைவம் கிடையாது நான் நடிச்சுது உனக்கு புரியாது

பூமி தானா திறக்கும்போது புதையல் எடுக்க கூடாதா ஹேய் மாமன் மீசை குத்தும்போது கண்ணும் சாயம் பூசாதா மோதிப் பார்ப்போம் பூவா தலையா போடு இப்பொழுதே

போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான் ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான் காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான் ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான்

ஊத்துக்குளி நாத்துதான் ஆஹான் ஊசிக் குத்தும் காத்துதான் ஓஹோ சமைஞ்சதிவ நேத்துதான் ஓய் சாயந்திரம் கூத்துதான் ஹேய் தாலி தரும் முன்னே அடி பெண்ணே இந்த வேகம் கூடாதே

காட்டிவிடு தாவணி பச்சக்கொடிதான் ராத்திரியில் நித்தம் நித்தம் குச்சுப்புடிதான் போட்டதென்ன சுத்தி வந்து சொக்குப்பொடிதான் ஆம்பளைக்கு அத்தனையும் அத்துப்படிதான்

ஊத்துக்குளி நாத்துதான் ஓஹோ ஊசிக் குத்தும் காத்துதான் ஆஹாஹ் சமைஞ்சதிவ நேத்துதான் ஓய் சாயந்திரம் கூத்துதான் அடி தூளு