Oray Muraithan

Oray Muraithan Song Lyrics In English


ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

ஒரே முறைதான்

வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே

நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே

வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே

நீலம் பூத்த விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே

வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாயே

அமர்ந்த வண்டு பறந்து விடாமல்
ஆசையில் அணைத்தாயேஓஹோஹோ

ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி


ஒரே முறைதான்

காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்

கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்

ஆஆஅஆஅ
காளையர் தோளில் தேடி மகிழ்ந்தால்
காதல் சுவையாகும்

கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்

பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் பகையாகும்

புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும்

ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

இருவர் : ஒரே முறைதான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ம்ம்ம்ம்ம்ம்ஹும்
ம்ம்ம்ம்ம்ஹும்ம்ம்ம்ம்