Ore Idam |
|---|
ஆஆஆஹா
ஆஆஆஆஅ
ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ
ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
எங்கெங்கோ கண்ணனின் லீலை
ராதைதான் கண்ணனின் சோலை
ஆடுவாள் கண்மணி பாவை
தேவையா மன்மத லீலை
ஆட நினைத்தால் என்னை அழைக்க
ஆசை பிறந்தால் என்னை அணைக்க
பெண்ணென்றால் நானும் பெண்தானே
ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
ராராரா ராராரா
ரரரரரர ரரரரரர ரா
ராரா ரார ராராரா
ராரா ரார ராராரா ரர ரா
மஞ்சத்தில் மஞ்சளின் கீதம்
கொஞ்சினால் குங்குமக் கோலம்
கோவிலே உங்களின் பாதம்
கோதை நான் பாடிடும் வேதம்
வந்த பறவை எங்கும் பறக்கும்
இந்தப் பறவை உங்கள் வரைக்கும்
சொல்லுங்கள் என்னென்ன வேண்டும்
காணலாம் பொன் மதுக் கன்னம்
கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம்
மீட்டலாம் மேனியின் வண்ணம்
காயங்கள் காதலின் சின்னம்
கட்டும் பொழுது
காலில் விழுந்தேன்
தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன்
சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ
ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை
மயங்கும் சொந்தம் இங்கே
கலங்க தேவை இல்லை தரவா ஆ
ஒரே இடம் நிரந்தரம்
இதோ உன் துணை இதோ என் இசை