Ore Raththamthan Oduthu

Ore Raththamthan Oduthu Song Lyrics In English


ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்

நல்லவங்க கெட்டவங்க நாலும் தெரிஞ்சவங்க உள்ளவங்க வல்லவங்க ஊருக்கு உழச்சவங்க

எல்லாருக்கும்தான் ஓடுது ஒரே ரத்தம்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்

சேத்துல பாடுபடும் சின்னானுக்கு ஒரே ரத்தம் திண்ணையில சாஞ்சு கெடக்கும் சீமானுக்கும் ஒரே ரத்தம்

ஆத்துலே துணி வெளுக்கும் அலமேலுக்கு ஒரே ரத்தம் அத மாட்டிக்கிட்டு மினுக்குற அலங்காரிக்கும் ஒரே ரத்தம்

ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்


வாளெடுத்து போராடும் வீரனுக்கும் ஒரே ரத்தம் கால் பிடிச்சு வாழுகிற கோழைக்கும் தான் ஒரே ரத்தம்

ஆறடி நிலமுமில்லா அடிமைக்கும் ஒரே ரத்தம் ஊருக்குள்ளே நூறு வேலி உள்ளவர்க்கும் ஒரே ரத்தம்

ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்

சேரியிலே செருப்பு தைக்கும் மாரிக்கும்தான் ஒரே ரத்தம் ஏரியிலே மீன் பிடிக்கும் இருளனுக்கும் ஒரே ரத்தம் உழைக்கிற தோழனுக்கும் உறிஞ்சி வாழும் துரைகளுக்கும் ஒரே ரத்தம் ஒரே ரத்தம் ஒரே ரத்தம்