Orey Raagam Orey Thaalam |
|---|
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
கண்கள் சிலை போல
அசையாமல் பார்க்கும்
பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்
ஆ ஆ ஆ ஆ ஆ
கண்கள் சிலை போல
அசையாமல் பார்க்கும்
பெண்மை தவறாமல் ஒரு வார்த்தை கூறும்
இன்று மலர் சொல்வதும்
வாழை மரம் சொல்வதும்
எந்தன் மனம் சொல்வதும்
ஒரே பேரல்லவோ
இன்று மலர் சொல்வதும்
வாழை மரம் சொல்வதும்
எந்தன் மனம் சொல்வதும்
ஒரே பேரல்லவோ
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
அன்று குணத்தோடு
மணம் கொண்டு நின்றேன்
இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ
அன்று குணத்தோடு
மணம் கொண்டு நின்றேன்
இன்று குலத்தோடு மனம் பேசக் கண்டேன்
பார்வை வயலானதே
ஆசை மழையானதே
காதல் பயிரானதே
என்றும் நிலையானதே
பார்வை வயலானதே
ஆசை மழையானதே
காதல் பயிரானதே
என்றும் நிலையானதே
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
ஒரே ராகம் ஒரே தாளம்
ஒரே பாடல் பாடுதம்மா
