Oru Jeevanthan Female

Oru Jeevanthan Female Song Lyrics In English


ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
இரு கண்ணிலும்
ஹாஆஅஆஅ
உன் ஞாபகம்
ஹாஆஅஆஅ
உறங்காமல் இருக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

அம்மாஅம்மாஅம்மா
அம்மாஅம்மாஅம்மா

பார் அம்மா
ஹாஆஅஆஅ
பறவைக்கும்
ஹாஆஅஆஅ
பாசங்கள் இருக்கின்றதுஊஊ

பறந்தோடி
ஹாஆஅஆஅ
இரைத்தேடி
ஹாஆஅஆஅ
பிள்ளைக்கு கொடுக்கின்றது

சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
ஹாஆஅஆஅ
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
ஹாஆஅஆஅ
பாலூட்டத்தான் நீ இல்லையே
தாலாட்டத்தான் தாய் இல்லையே

அம்மா அம்மா
தனியாய் தவித்தேன் தனியே

ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ

ஹாஆஅஆஅ(4)


நீ தானே
ஹாஆஅஆஅ
பல மாதம்
ஹாஆஅஆஅ
மடி மீது
சுமந்தாய் அம்மாஆஅஆ

நான் வந்து
ஹாஆஅஆஅ
உனைத்தேட
ஹாஆஅஆஅ
மறைவாக இருந்தாய் அம்மா

நான்தானம்மா உந்தன்
பிள்ளைச் செல்வம்
ஹாஆஅஆஅ
நீதானம்மா எந்தன்
பேசும் தெய்வம்
ஹாஆஅஆஅ
காணாமலே தொழுவேன் அம்மா
கண்டேன் இன்று அழுதேன் அம்மா

அம்மா நீதான்
அணைத்தால் அதுதான் இன்பம்

ஒரு ஜீவன்தான்
ஹாஆஅஆஅ
உன் பாடல்தான்
ஹாஆஅஆஅ
ஓயாமல் இசைக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ
இரு கண்ணிலும்
ஹாஆஅஆஅ
உன் ஞாபகம்
ஹாஆஅஆஅ
உறங்காமல் இருக்கின்றது
ஹாஆஅஆஅஹாஆ

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

அம்மாஅம்மாஅம்மா
அம்மாஅம்மாஅம்மா