Oru Kaalam Varum

Oru Kaalam Varum Song Lyrics In English

ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்

ஓஓஓஒஓஒ ஓஓஓஒஓஒஓஹ்ஓஹ்

தன் வீடுண்டு வாழ்வுண்டு என எண்ணி வாழ்வார்கள் நம் நாடென்று பாராமல் கண் மூடி போவார்கள் அவர் வாழ்ந்தென்ன லாபம் இந்த மண்மீது பாரம்

அட எல்லோரும் ஒன்றே எனச் சொல்வார்கள் இங்கே இவையெல்லாமே வேதம் ஆமாம் போங்கடா

ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்

சிலர் ஊராரின் தோள் மீது ஊர்கோலம் போவார்கள் பலர் ஏனென்று கேளாமல் ஏமாந்து போவார்கள்

ஒரு பூங்காற்று நாளை ஒரு புயலாக கூடும் ஒரு நதி கூட நாளை எரிமலையாக மாறும் அது பஞ்சாங்கம் பார்த்தா மாறப்போகுது

ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம் அதில் வீரம் வரும் புது வேகம் வரும் அன்று பூகம்பமே பூவில் தோன்றலாம்