Oru Kudumbam Inge

Oru Kudumbam Inge Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது திருக்குறளில் சொன்ன பாடல் ஆனது

ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

அம்பிகை போல் அன்னை அந்த ஆண்டவன் போல் தந்தை அம்பிகை போல் அன்னை அந்த ஆண்டவன் போல் தந்தை மூன்று கால பூஜை செய்ய மூன்று பேர்கள் பிள்ளை

ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

தலை மகன் என்று பிறந்தவன் இங்கு தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று தன் வழியே தனி வழியாய் செல்லும் குணம் உண்டு


ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

அடுத்தது என்று பிறந்தது ஒன்று சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை கறந்த பாலை போல் இருக்கும் குழந்தை மனம் வெள்ளை

ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை