Oru Nimisham |
|---|
என் இராசாத்திக் கிளியே
இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம்
தவமிருந்தேன்
நான் நம்பி கெடந்ததெல்லாம்
நம்பலயோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி
வெறும் சருகா போனதடி
தெம்பும் கொறைஞ்சதடி
தெசையெல்லாம் மாறுதடி
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி
என் சின்னப் பசுங்கிளியே
சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு
எப்படிதான் வாழுவியோ
கண்ணங்கதப்புக்குள்ளே
காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தார
எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரம் கொடுக்கும்
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி
என் சாதி சனம் தடுத்திருந்தா
சத்தியமா கொன்னுருப்பேன்
மோதி சண்ட போட்டுப்புட்டு
மூச்சடக்கிப் போயிருப்பேன் ஆ
பாவி மகளே
நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி
அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி
நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி