Oru Paadal Solgiren

Oru Paadal Solgiren Song Lyrics In English


ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும்

ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும்

உதயமாகும் புதிய வானம்

இதயம் யாவும் இனிய கானம்

ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்

நீ அன்புக்கு கொடி காட்டு அது வாழ்க்கைக்கு வழிக் காட்டும் வரும் ஆசைக்கு தடை போடு அது வெற்றிக்கு துணை ஆகும் செல்லும் வழி பூந்தோட்டம் உனைத் தாலாட்டும் இந்த ஊரே பாராட்டும்

உன் பள்ளியில் ஒரு பாடம் இன்னும் இருக்குது ஏராளம் தாய் தந்தையின் சொல் கேட்டு தமிழ் வீரத்தை நிலை நாட்டு குற்றங்களை கண்டால் நீயும் போராடு அதை வீழ்த்தும் துணிவோடு

உலகமே உனை வணங்குமே நீ தமிழை பாடும்போது

தடைகள் யாவும் உடையுமே நீ வீரனாகும் போது

ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்

நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும்


வரும் கொடுமைக்கு கலங்காதே அதை முடித்திட தயங்காதே படுபாவிகள் நடமாட்டம் இந்த நாட்டுக்கு ஆகாதே உனக்கொரு காலம் உண்டு கடமை உண்டு படைத்திடு வரலாறு

நெஞ்சுக்கு பலம் வேண்டும் அது நேர்மையில் வர வேண்டும் நம் அறிவுக்கு புகழாரம் அயல் நாட்டவர் தர வேண்டும் உனக்கொரு பாதை உண்டு பயணம் உண்டு பணிவாய் நடை போடு

துணிந்த பின் உன் தோள்களில் இனி தோல்வி என்பதில்லை ஹாஹ்

எளிமையும் மன பொறுமையும் புரட்சி தலைவனாக்கும் உன்னை

ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்

நான் கேட்டு நடக்கப் போறேன் வழிப் பாத்து நடக்கப் போறேன் புகழ் வானில் பறக்கப் போறேன்

உதயமாகும் புதிய வானம்

இதயம் யாவும் இனிய கானம்

இருவர் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்